சினிமா உலகில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ஹீரோ என்ற அந்தஸ்தையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரம் கெஸ்ட் ரோல் போன்றவற்றில் நடிப்பவர்கள் அந்த வகையில் விஜய் சேதுபதிக்கு முன்பே ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்யா. இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
இவர் கடைசியாக நடித்த ஒரு சில திரைப்படங்கள் வெற்றி படங்களாக பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. அந்த வகையில் எனிமி, அரண்மனை 3 போன்ற படங்கள் அடங்கும் தோல்வியிலிருந்து தான் மீண்டு வர சிறந்த இயக்குனர்களுடன் தற்போது ஆர்யா கமிட் ஆகி நடித்து வருகிறார்.
அதில் முதலாவதாக சக்தி சௌந்தர்ராஜன் உடன் கைகோர்த்து ஆர்யா நடித்துள்ள திரைப்படம் தான் கேப்டன். இந்த படத்தில் ஒரு ஆர்மி ஆபீசராக நடித்திருக்கிறார் இவருடன் கைகோர்த்து ஐஸ்வர்யா லட்சுமி, காவியா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், சிம்ரன், கோகுல் ஆனந்த தியாகராஜன் சுரேஷ் சந்திரா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.
இந்த படம் நேற்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கிராபிக்ஸ் சரியில்லை படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை ஆனால் ஆர்யா சிம்ரன் போன்றவர்களின் நடிப்பு சூப்பராக இருப்பதாக கூறி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் கேப்டன் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் அள்ளியது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பார்கையில் இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டுமே சுமார் 1.5 கோடி வரைந்தான் வசூலித்திற்கும் என சொல்ல படுகிறது. வருகின்ற நாட்களில் கேப்டன் படம் வசூலில் முன்னேற்றம் அடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.