வசூலில் பட்டையை கிளப்பும் அருண் விஜயின் “யானை படம்” – 5 நாள் முடிவில் அள்ளிய கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

yaanai-
yaanai-

விஜயகுமாரின் மகன் அருண் விஜய் அண்மை காலமாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் என்னை அறிந்தால், குற்றம் 23, தடம் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள யானை திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியது யானை திரைப்படம். படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் கலந்த படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் அருண் விஜய் உடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர், யோகி பாபு, ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, KGF பட வில்லன் மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது அதன் காரணமாக தற்போது வசூலிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. யானை திரைப்படத்தை எதிர்த்து டி ப்ளாக், ராக்கெட்ரி படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் 5 நாள் முடிவில் யானை திரைப்படம் சுமார் 12 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற நாட்களிலும் நல்லதொரு வசூலை அருண் விஜயின் யானை படம் அல்லும் என கூறப்படுகிறது.

இதனால் இயக்குனர் ஹரியும் நடிகர் அருண் விஜய்யும் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் மேலும் படக்குழுவும் செம்ம உற்சாகத்தில் இருக்கிறது கமலின் விக்ரம் படத்தை தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் அள்ளிய திரைப்படமாக யானை படம் இருக்கிறது.