சினிமா உலகில் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடிக்க பல நடிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் ஆனால் ஒரு சில நடிகர்களுக்கு அது ஈசியாகவே கிடைத்து விடுகிறது. அந்த வகையில் நடிகர் அருண் விஜய்க்கு கல்லூரி படிக்கும் போதே ஹீரோ என்ற அந்தஸ்தை கிடைத்து விட்டது ஆனால் அதை எப்படி சரியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை அப்போது அவருக்கு தெரியவில்லை..
சொல்ல வேண்டுமென்றால் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காமல் அருண் விஜயின் பெரும்பாலான படங்கள் தோல்வி படங்களாக மாறின இதனால் ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதன் பிறகு சினிமா எப்படிப்பட்டது எப்படி நடித்தால் வெற்றியை ருசிக்க முடியும் என்பதை நன்கு ஆராய்ந்து அதன் பிறகு கிடைக்கின்ற வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.
அந்த வகையில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக விக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதற்காக சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து மிக கடுமையாக உழைத்தார் அதற்கு ஏற்ற பலன் அந்த படத்தில் கிடைத்தது அதுமட்டுமல்லாமல் அதன் பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன. அதை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து நடித்தார் குற்றம் 23, தடம் போன்ற படங்களில் பெரிய வெற்றியை ருசித்தது.
அதனை தொடர்ந்து ஹரியுடன் முதல் முறையாக கைகோர்த்து அருண் விஜய் நடித்த திரைப்படம் யானை. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருந்தது. இந்த படத்தில் அருண் விஜய் உடன் கைகோர்த்து சமுத்திரகனி, பிரியா பவானி சங்கர், யோகி பாபு, புகழ்,ராதிகா சரத்குமார் மற்றும் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.யானை திரைப்படம் 25 நாட்களைக் கடந்து இப்பொழுதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுவரை யானை திரைப்படம் எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் யானை திரைப்படம் 25 நாள் முடிவில் சுமார் 20 கோடி வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது அடுத்தடுத்த நாட்களில் எந்த ஒரு டாப் நடிகரின் படங்களும் வெளிவராமல் இருப்பதால் நிச்சயம் இன்னும் சில கோடிகளை யானை படம் அள்ளும் என படக்குழு நம்பி இருக்கிறது.