சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு வாங்கும் அட்வான்ஸ் தொகை எவ்வளவு தெரியுமா.? உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்.!

rajini
rajini

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்று ஓடிக் கொண்டிருப்பவர் பி. வாசு. இவர் முதலில் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக இருந்து பின் இயக்குனர் சந்தான பாரதியும்  இணைந்து பன்னீர் புஷ்பங்கள், மெல்ல பேசுங்கள், நீதியின் நிழல், மதுமலர் போன்ற படங்களை இயக்கியினார்.

பி. வாசு தனியாக முதலில் இயக்கிய திரைப்படம் கதாநாயகா இந்த படம் கன்னடத்தில் வெளியானது. தமிழில் முதலில் என் தங்கச்சி படிச்சவ என்னும் படத்தை இயக்கி அறிமுகமானார். ஒரு கட்டத்தில் ரஜினி உடன் கைகோர்த்து மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி படங்களை எடுத்தார்.

இதில் சந்திரமுகி திரைப்படம் 1000 நாட்களைக் கடந்து ஓடி அசத்தியது. சந்திரமுகி முதல் பாகத்தை தொடர்ந்தது தற்பொழுது பி. வாசு இரண்டாவது பாகத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் பி வாசு சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

ரஜினியின் சந்திரமுகி திரைப்படத்தில் நடிக்கும் போது அட்வான்ஸ் ஆக ஒரு ரூபாய் தான் வாங்குகிறார். படம் முடியும் வரை படமே கேட்கவில்லை படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகு அவருக்கு முழு சம்பளம் கொடுக்கப்பட்டது. ரஜினியை போலவே காமெடி நடிகர் கவுண்டமணியும் அட்வான்ஸ் ஆக எப்பொழுதுமே ஒரு ரூபாய் தான் வாங்குவாராம் இதனைப் பேட்டியில் பி.வாசு கூறினார்.

ஒரு தயாரிப்பாளர் ஒரு நடிகருக்கு சம்பளத்தில் பாதையை அட்வான்ஸ் ஆக தருவது வழக்கம் அந்த அட்வான்ஸ் பணத்திற்கு வட்டி ஏறும் இதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுவதும் உண்டு இதனை தவிர்க்கவே ரஜினி, கவுண்டமணி போன்றவர்கள் அட்வான்ஸ் ஆக ஒரு ரூபாய் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.