நடிகை எமி ஜாக்சன் “ரஜினியின் 2.0” படத்தில் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

amy-jackson
amy-jackson

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்து ஓடி கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரைகளும் கமர்சியல் ஆக்சன் என எந்த மாதிரியான கதையுள்ள படங்களாக இருந்தாலும் அதில் தனது ஸ்டைலில் வெளிகாட்டி வெற்றியை அள்ளியவர் ரஜினி. இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

மேலும்  ரஜினிகாந்தை  அனைவரும் செல்லமாக சூப்பர் ஸ்டார் என்ன அழைக்கின்றனர் தற்பொழுது கூட இளம் தலைமுறை நடிகர்களுக்கு நிகராக படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 169 திரைப்படத்தில் நடிக்கும் வேலைகளை பார்த்து வருகிறார் அந்த படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர்  படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து சிவராஜ்குமார், சிவகர்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் வெகு விரைவிலேயே  தொடங்கப்பட இருக்கிறது. இது ஒரு பக்கம் இப்படி இருக்க..

மறுபக்கம் ரஜினி படத்தில் நடித்தால் போதும் என பல இளம் நடிகைகள் நடிகர்கள் தொடங்கி டாப் நடிகர்கள் நடிகர்கள் விருப்பம் தெரிவித்து இயங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது யாரோ ஒரு சிலருக்கு தான் அமைகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் ஹீரோயின்னாக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து விழுந்தவர்.

நடிகை எமி ஜாக்சன் இவர் ரஜினியுடன் 2.0 திரைப்படத்தில் நடித்த அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்திற்காக நடிகை எமி ஜாக்சன் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். 2.0 திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை எமி ஜாக்சன் சுமார் 1 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2.0 திரைப்படத்தை தொடர்ந்து நடிகை எமி ஜாக்சன் பெரிய அளவு படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.