தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் விக்ரம் இவர் தனது திரைப்படத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் ஒவ்வொரு படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு நடித்து வருகிறார். அதனாலயே மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்துப்போன நடிகர்களில் ஒருவராக விக்ரம் பார்க்கப்படுகிறார்.
இருப்பினும் சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கின்றன அதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதை சரி இல்லை என சொல்லப்படுகிறது. இதனை நன்கு உணர்ந்து கொண்ட விக்ரம் தொடர்ந்து திறமையான இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார்.
அந்த வகையில் மணிரத்தினத்துடன் கைகோர்த்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து இப்போது வெற்றி இயக்குனர் பா ரஞ்சித்துடன் இணைந்து தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த உண்மை சம்பவங்களை கொண்டு படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் விக்ரமுடன் கைகோர்த்து மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் ஹாலிவுட் ஹீரோ ஒருவர் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது மற்றும் நீளம் பட தயாரிப்பும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் தங்கலான் படப்பிடிப்பு கடப்பா மற்றும் கோலார் போன்ற பல்வேறு இடங்களில் படம் எடுக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் தங்கலான் படத்திற்காக விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கி நடித்து வருகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி இந்த படத்திற்கு விக்ரம் சுமார் 28 கோடி சம்பளம் வாங்க உள்ளாராம். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.