90 கால கட்டங்களில் நடித்த நடிகர்கள் பலரும் இப்பொழுது உச்ச நட்சத்திரமாக இருக்கின்றனர். அந்த வகையில் அஜித், விஜய் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர் ஆனால் ஒரு சிலரோ அப்பொழுது இருந்து இப்பொழுது வரையிலும் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடிக்க முடியாமல் நடித்து வருகின்றனர். அந்த லிஸ்ட்டில் உள்ளவர் தான் நடிகர் பிரபுதேவா.
இவர் 90 கால கட்டங்களில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் ஆரம்பத்தில் இருந்து பல வெற்றி படங்களை கொடுத்து ஓடினாலும் தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தை இவரால் பிடிக்க முடியாமல் போனது காரணம் தமிழ் சினிமாவையும் தாண்டி இவர் கன்னடம் தெலுங்கு ஹிந்தி என பிற மொழிகளில் நடித்துக் கொண்டிருந்ததால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போனது.
மேலும் ஒரு கட்டத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்து வெற்றி கண்டார். சினிமா உலகில் நடிகராகவும், இயக்குனராகவும் நடன கலைஞராகவும் தன்னை வளர்த்துக் கொண்டு ஓடுகிறார். ஆனால் அவரால் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடிக்க முடியாமல் இப்பொழுதும் இருந்து வருகிறார்.
இவர் இப்பொழுதும் பல்வேறு படங்களில் நடித்து தான் வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பொய்கால் குதிரை, மை டியர் பூதம், தேள், பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் தோல்வி படங்களாக அமைந்துள்ளன இதிலிருந்து மீண்டு வர அவரும் எவ்வளவோ பண்ணி தான் பார்க்கிறார்.
ஆனால் சினிமாவில் ஒரு நடிகராக அவரால் ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போய் உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் பிரபுதேவா ஒரு படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் ஒரு படத்திற்கு சுமார் 4 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.