தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மாளவிகா மோகனன் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட என்ற திரைப்படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து இருப்பார்.
இவ்வாறு தான் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எளிதில் அடுத்தடுத்த பட வாய்ப்பை பெற்று அதுமட்டுமில்லாமல் தளபதி விஜயுடன் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டார்.
இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் அதிக அளவு முக்கியத்துவம் இல்லாததன் காரணமாக இவருக்கு சொல்லும்படி புகழ் கிடைக்கவில்லை. இந்நிலையில் தனுஷுடன் மாறன் என்ற திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இவ்வாறு விட்ட இடத்தை இந்த திரைப்படத்தின் மூலம் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்த மாளவிகா விற்கு மறுபடியும் ஏமாற்றமே மிஞ்சியது அந்தவகையில் இந்த திரைப்படம் படம் தோல்வியடைந்தது மட்டுமில்லாமல் வசூலில் மண்ணை கவ்வியது.
இந்நிலைகள் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி பற்றி ரசிகர் ஒருவர் ஏடாகூடமான கேள்வியை கேட்டுள்ளார் அதாவது மாளவிகாவிடம் இந்த திரைபடத்தில் நீங்கள் நடித்த படுக்கையறை காட்சி எத்தனைமுறை படம் எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது அவர் கூறியது என்னவென்றால் உங்கள் மண்டைக்குள் இருப்பதுதான் மோசமான இடம் என்று பதில் கூறி உள்ளார். இவ்வாறு அவர் பேசியதை பார்த்து பல ரசிகர்களும் பாராட்டியது மட்டுமில்லாமல் இந்த பதிவு சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.