தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி இவர் கையில் தற்போது மூன்று திரைப்படங்கள் இருக்கின்றன அதில் ஒரு படமான விருமன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நடிகர் கார்த்தி இயக்குனர் முத்தையாவுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து விருமன் படத்தில் நடித்து உள்ளார். இந்த படமும் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், சரண்யா பொன்வண்ணன், சூரி, கருணாஸ், மைனா நந்தினி, வடிவுக்கரசி, மனோஜ், சிங்கம்புலி என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து அசத்தியுள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி ஆக்சன் செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்து இருந்ததால் தற்பொழுது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று காலை 7 மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட்டது.
படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பராக ஓடுகின்றது. படம் குறித்து வருகின்ற விமர்சனங்களும் பாசிட்டிவாக இருப்பதால் படம் அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வரவேற்பை பெறுவதோடு வசூலிலும் ருத்ர தாண்டவம் ஆடும் என தெரிய வருகிறது.
விருமன் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே மொத்தம் சுமார் 475 திரையரங்குகளுக்கு மேல் வெளியான சொல்லப்படுகிறது. ஆனால் உறுதியாக தெரியவில்லை. ஆனால் இது கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் வசூலை விட இது மூன்று மடங்கு அதிகமாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக திரைப்பட விநியோகஸ்தர் ஒருவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.