சினிமா உலகில் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் பயப்படாமல் அதில் துணிந்து நடித்து வெற்றியை காண்பவர்கள் வெகு சிலரே.. அந்த லிஸ்டில் இடம் பெற்ற உள்ளவர்களில் ஒருவர் விக்ரம் இவர் படத்தின் கதைக்காக எப்படி வேண்டுமானாலும் தனது உடலை வருத்தி அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது அவரது வழக்கம்.
அந்த வகையில் இவர் இதுவரை சேது, ஐ, அந்நியன், பிதாமகன் போன்ற பல்வேறு படங்களில் நடித்த மிரட்டி இருப்பார். இப்பொழுது கூட அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ள கோப்ரா திரைப்படத்தில் கூட நடிகர் விக்ரம் பத்து விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார் இந்த படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி அதாவது நாளை படம் ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படத்தை பெரிய அளவில் பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த படத்தில் விக்ரமுடன் கைகோர்த்து மிருணாளினி ரவி, மியா ஜார்ஜ், ரோபோ ஷங்கர், கே எஸ் ரவிக்குமார், இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, பாபு ஆண்டனி, ரவீனா ரவி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்த படம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகி இருக்கிறது இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய ஒரு வெற்றி ருசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலை சூப்பர் தகவல் கிடைத்துள்ளது. நாளை வெளியாக உள்ள கோப்ரா திரைப்படம் தமிழகத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது.
என்பது குறித்து தான் பார்க்க இருக்கிறோம் இந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மூன்று மொழிகளில் ரிலீஸ் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் உலக அளவில் 2000 -த்திற்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் வெளியாக இருக்கிறது தமிழகத்தில் மட்டுமே சுமார் 800 திரையரங்குகளில் கோப்ரா படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.