சினிமாவில் மிகப் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பது வழக்கமான ஒன்றுதான் அந்த வகையில் ரசிகர்கள் கேட்கும் கேள்வி கொஞ்சம் வினோதமாகவும் மோசமாகவும் இருப்பது வழக்கம்தான்.
இவ்வாறு அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு சில பிரபலங்கள் மிக தைரியமாக பதில் கூறுவது வாடிக்கையாக இருக்கிறது அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் இடம் ரசிகர் ஒருவர் நீங்கள் இதுவரை எத்தனை காதல் தோல்விகளை சந்தித்து உள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு நடிகை சுருதிஹாசன் எத்தனை காதலிகள் உங்களுக்கு இருந்தார்கள் என கேள்வி எழுப்பியதுமட்டுமில்லாமல் நான் நினைக்கிறேன் உங்களுக்கு யாருமே இல்லை என்று என சுருதிஹாசன் பதிவிட்டிருந்தார்.
நடிகை சுருதிஹாசன் லண்டனை பூர்விகமாக கொண்ட பிரபல நடிகர் மைக்கேல் என்பவரை காதலித்து வந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் இவர்கள் இருவரும் சிறிது காலத்திலேயே கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விட்டார்கள்.
இவ்வாறு இந்த காதல் தோல்வியை தொடர்ந்து வெகு காலமாக சினிமாவில் முகம் காட்டாமல் இருந்து வந்த ஸ்ருதிஹாசன் அதன்பிறகு மற்றொரு காதலனை கமிட் செய்துள்ளார் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஸ்ருதிஹாசன் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமலஹாசன் மகள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இவர் கதாநாயகியாக நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் ஏன் பாடகர் இசை என பன்முக திறன் கொண்டவர் அவர்.