நடிகர் தனுஷ் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருகிறார் இவர் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்கள் தான். இருப்பினும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. அதை கண்டு வருத்தப்படாமல் நடிகர் தனுஷ் அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு நடித்து வருகிறார்.
அந்த வகையில் தனுஷ் கையில் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் கைவசம் இருக்கின்றன. இந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளிவர இருக்கிறது. சனிமா உலகில் இப்படி நல்ல படங்களில் நடித்து வந்தாலும் ஒரு சில படங்களில் கமிட் ஆகி சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகியும் உள்ளார் அந்த வகையில் நடிகர் தனுஷின் எந்தெந்த படத்தில் இருந்து விலகி உள்ளார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அது குறித்து விலாவரியாக பார்ப்போம்.
- தேசிய நெடுஞ்சாலை : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த முதல் திரைப்படம் பொல்லாதவன் ஆனால் முதலில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டிய திரைப்படம் தேசிய நெடுஞ்சாலை தான். சில காரணங்களால் போஸ்டர் மட்டும் வெளிவந்து படம் பாதியிலேயே நின்றது.
2. திருடன் போலீஸ் : இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருந்தார் அந்த படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியாகி பின் சில காரணங்களால் பாதியிலேயே கைவிடப்பட்டது. 3. இது மாலை நேரத்து மயக்கம் : செல்வராகவன் இயக்கத்தில் இது மாலை நேரத்து மயக்கம் என்ற பெயரில் ஒரு படம் தொடங்கப்பட இருந்தது இந்த படத்தில் தனுஷ் ஆண்ட்ரியா ஆகியோர் நடிகை இருந்தனர் சில காரணங்களால் இந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
4. சூதாடி : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் இந்த படத்தில் பார்த்திபன், மீனாட்சி லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் முதல் ஐந்து நாள் மட்டுமே ஷூட்டிங் நடத்தப்பட்ட பின் பாதிலேயே கைவிடப்பட்டது. 5. டாக்டர்ஸ் : செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் டாக்டர்ஸ் இந்த படத்தில் சோனியா அகர்வால் ஹீரோயினாக நடிக்க இருந்தார் போஸ்டர் உடன் மட்டும் அறிவிக்கப்பட்டு பின் சில காரணங்களால் கைவிடப்பட்டது