வாரத்தின் இறுதி நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மக்களை எண்டெர்டைன்மென்ட் செய்ய டிவி தொலைக்காட்சிகள் பல ரியாலிட்டி ஷோக்களை வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக மற்ற தொலைக்காட்சிகளை காட்டிலும் விஜய் டிவி சற்று வித்தியாசமாக காமெடி கலந்த நிகழ்ச்சிகளை கொடுத்து வருகின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி.
இதன் ஒவ்வொரு சீசனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி யில் முக்கிய பங்கு வகித்தது. இந்த ஷோ பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு காமெடி கலந்த கலாட்டா நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது இதன் நான்காவது சீசன் தற்போது நடந்து வருகிறது இதில் ஜட்ஜ் ஆக வழக்கம் போல் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் உள்ளனர் மற்றும் இந்த நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சிக்கு பக்கபலமாக இருப்பது இதில் உள்ள கோமாளிகளான புகழ், மணிமேகலை, பாலா, சுனிதா, சிவாங்கி போன்றவர்கள் தான். அதிலும் இந்த சீசனில் வழக்கத்திற்கு மாறாக சிவாங்கி குக்காக வந்துள்ளார். இப்படி இருக்க அண்மையில் இதில் கோமாளியாக கலந்து கொண்டு வந்த மணிமேகலை..
சென்ற வாரம் எபிசோடு உடன் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகி உள்ளேன் இனி நான் வர மாட்டேன் என அதிர்ச்சி அளித்துள்ளார். இது மணிமேகலை ரசிகர்கள் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரசிகர்கள் என பலருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது. மேலும் மணிமேகலைக்கும் விஜய் டிவிக்கும் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது மற்றும் மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாய் என பல வதந்திகள் எழும்பியுள்ளன.
ஆனால் அவர் எதற்கு இந்த நிகழ்ச்சியை விட்டு விலகினார் என்பது தெரியவில்லை. இப்படி இருக்க தற்போது மணிமேகலை குக் வித் கோமாளியில் கலந்து கொண்டதற்கு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மணிமேகலை இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடுக்கு 60 ஆயிரம் என வாங்கியுள்ளார் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது.