நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுப் போட எத்தனை லட்சம் வாங்குகிறார் தெரியுமா.? அசர வைக்கும் தகவல்.

samantha
samantha

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் சிறப்பாக நடித்து கலக்கி வருகிறார் மேலும் பாலிவுட்டிலும் நடித்து அசத்து இருக்கிறார் சமந்தா. சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம்.

மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்த நிலையில் இந்த திரைப்படத்தில் அமைந்துள்ள ஓ சொல்றியே மாமா என்ற பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியது இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. அதைத் தொடர்ந்து தமிழில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் தெலுங்கில் சகுந்தலம், யசோதா போன்ற சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் சமந்தா ஒரு பக்கம் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்துவருகிறார். பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறார்.

இவர் வெளியிட்ட சில கிளாமர் புகைப்படங்கள் சர்ச்சையாகவும் அமைந்தன. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது செயலை சிறப்பாக செய்து வரும் சமந்தாவை சோசியல் மீடியாவில் பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன இந்த நிலையில் சமந்தா குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சமந்தா அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் ஒரு விளம்பர பதிவிற்காக 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை வாங்குகிறாராம். முன்பெல்லாம் சமந்தா ஒரு விளம்பரத்திற்காக 8 முதல் 10 லட்சம் வரை வாங்கி வந்த நிலையில் தற்போது அவரது விளம்பர கட்டணத்தை உயர்த்தி உள்ளாராம்.