AK 62 படத்தில் மொத்தம் இத்தனை ஹீரோயின்களா.? யார் யார் தெரியுமா..

ak
ak

நடிகர் அஜித்குமார் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் ஆர்வத்துடன் இந்த படத்தை பார்த்து வருகின்றனர்.

அதன் காரணமாக இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இதுவரை மட்டுமே 150 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்திருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 62வது திரைப்படத்தில் அஜித் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்

அதற்கான படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் ஏகே 62 திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்பது குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன முதலில் நயன்தாரா என சொல்லப்பட்டது அதன் பிறகு த்ரிஷா என சொல்லப்பட்டது ஆனால் உண்மையில் இந்த இரண்டு பேருமே அஜித்துக்கு ஜோடி கிடையாது.

ஏகே 62 திரைப்படத்தில் அஜித்துக்கு மொத்தம் இரண்டு ஜோடிகள்.. தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தான் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் மற்றும் பாலிவுட் நடிகை ஈஷா பாட்ணியும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

வெகு விரைவிலேயே அதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என சொல்லப்படுகிறது இந்த விஷயத்தை கேட்ட அஜித் ரசிகர்கள் ஏகே 62 திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாற வாழ்த்துக்கள் எனக் கூறி இப்பொழுது கமெண்டுகளையும், லைக்குகளையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர்.