நடிகர் சூர்யா சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக இவர் கடைசியாக நடித்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் அந்த வகையில் சூரரை போற்று, ஜெய் பீம், எதற்கு துணிந்தவன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அசத்தியது.
இப்பொழுது கூட சிறந்த இயக்குனர்களுடன் கை கோர்த்துள்ளார். பாலா உடன் வணங்கான் அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் ஒரு புதிய படம் தேசிய விருது பெற்ற வெற்றி மாறனுடன் ஒரு படம், சுதா கொங்கரா உடன் ஒரு படம் என நடிக்க இருக்கிறார் இதனால் சூர்யாவின் மார்க்கெட் எகிறி கொண்டே இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூர்யா சிறுத்தை சிவா உடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 42 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அண்மையில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டது இந்த படத்தின் சூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என சொல்லப்படுகிறது.
இதுவரை சூர்யா இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள்தான் அந்த வகையில் இந்த படமும் ஒரு வெற்றி படமாக அமையும் என தெரிய வருகிறது. இந்த நிலையில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் என்னென்ன என்பது குறித்து தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம்.
பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, மாற்றான், 24 போன்ற படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் அந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான். இப்பொழுது கூட சிறுத்தை சிவா சூர்யா கூட்டணியில் உருவாகும் சூரியா 42வது படத்திலும் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதுவும் ஒரு வெற்றிப் படம் வரிசையில் இணையும் என சொல்லப்படுகிறது.