லியோ படத்தை வெற்றிகரமாக முடிக்க “லோகேஷ் கனகராஜ்” எடுத்துக்கொண்ட நாட்கள் எவ்வளவு தெரியுமா.? அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்

lokesh

lokesh kanagaraj :தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை வைத்து எடுக்கவே பல இயக்குனர்கள் படாத பாடுபடுகிறார்கள். ஆனால் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் ஆறு, ஏழு டாப் ஹீரோக்களை வைத்து படம் பண்ணி வெற்றி கண்டு வருகிறார்.  மாநகரம், கைதி,  மாஸ்டர் படத்தின் வெற்றி தொடர்ந்து கடைசியாக லோகேஷ்..

உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம்  என்னும் படத்தை எடுத்தார். அவருடன் இணைத்து பல நட்சத்திர பட்டாள்மே நடித்தது. படம் வெளிவந்து 400 வசூல் செய்தது. அதை தொடர்ந்து லியோ படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்திலேயும் விஜய் உடன இணைந்து சஞ்சய் தத், மிஸ்கின், மன்சூர் அலிகான்..

கௌதம் வாசுதேவ் மேனன் என பல டாப் நடிகர்கள் நடித்துள்ளனர் படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிவடைந்து தொடர்ந்து லியோ படக்குழு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்ததால் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது உதவி இயக்குனர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொன்னது.. என்னவென்றால் கிட்டதட்ட ஆறு மாதங்கள் என மொத்தம் 125 நாட்களில் லியோ படப்பிடிப்பை முடித்து விட்டதாக தெரிவித்தார்.

lokesh
lokesh

மேலும் லியோ படகுழுவினற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். லோகேஷ் இந்த பயணம் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இதனை ஒருபொழுதும் மறக்க மாட்டேன் என நிகழ்ச்சியாக கூறினார். இந்த தகவல் தற்பொழுது தளபதி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிய வருகிறது