நடிகர் அஜித் குமார் தமிழ் திரை உலகில் கால் தடம் பதித்திலிருந்து இப்பொழுது வரையிலும் அதிக தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் அண்மை காலமாக சிறந்த இயக்குனர்கள் நன்கு கதையை கேட்டு நடிப்பதால் அஜித்தின் திரைப் படங்கள் வெற்றி பெறுகின்றன.
அதனால் ரசிகர்களும் நாளுக்கு நாள் அஜித்தை பின் தொடர்ந்து வருகின்றனர். கடைசியாக கூட அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் அடித்து நொறுக்கியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித் தனது 61 மற்றும் 62 படத்திற்கான இயக்குனர்களை தேர்வு செய்து உள்ளார்.
முதலில் அஜித்தின் 61 வது திரைப் படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை ஹச் வினோத் மிக சிறப்பாக இயக்கி வருகிறார் பிரமாண்ட பொருட்செலவில் போனிகபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
அஜித் 61 படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரி மையமாக வைத்து உருவாகும் என தெரியவருகிறது. படம் நிச்சயம் வேற லெவல் இருக்கும் என கூறப்படுகிறது. காரணம் இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் அஜித்குமார் அதிரடியாக உடல் எடையைக் குறைத்து நடித்து வருகிறார்.
இந்த படத்தை இந்த வருடமே வெளியிட அஜித் கடுமையாக நடித்து வருகிறார் படக்குழுவும் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அதன்படி பார்வையில் நடிகர் அஜித்குமாரின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 350 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.