சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன் அருள் தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆகி உள்ளார். முதலில் இவர் தனது கடை விளம்பரத்திற்காக மட்டும்தான் நடித்து வந்தார். இந்த சமயத்தில் தான் இயக்குனர்களான ஜேடி – ஜெரி சொன்ன கதை ரொம்ப பிடித்து போகவே அந்த திரைப்படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து விவேக், விஜயகுமார், பிரபு, ரோபோ சங்கர், தேவதர்ஷினி, கீர்த்திகா டிவாரி, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் காமெடி என அனைத்தும் சிறப்பாக பொருந்தி இருந்ததால் படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படம் ஓடியது.
இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகியது. தமிழகத்தில் மட்டுமே சுமார் 600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ஓடியது. முதல் நாளே கோடிக்கணக்கில் வசூல் செய்ததால் அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வரவேற்பை பெற்று இந்த திரைப்படம் ஓடியது.
முதல் படமே சரவணன் அவர்களுக்கு நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளதால் அவர் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறாராம். இப்படி இருக்கின்ற நிலையில் தி லெஜெண்ட் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் 12 நாள் முடிவில் சுமார் 12.2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.
இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் இந்த செய்தி பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சரவணன் அருள் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கூட வாய்ப்பு இருப்பதாக ஒரு பக்கம் தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கிறது.