சிவகுமாரின் இரண்டாவது மகன் நடிகர் கார்த்தி தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் மீண்டும் ஒருமுறை இயக்குனர் முத்தையாவுடன் கைகோர்த்து நடிகர் கார்த்தி நடித்த திரைப்படம் விருமன் தான் இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையை மையமாக வைத்து உருவானது.
இந்த படம் சூப்பராக இருந்த காரணத்தினால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது தொடர்ந்து இந்த படம் திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது அதன் காரணமாக வசூலிலும் அடித்து நொறுக்கி உள்ளது இந்த படத்தில் கார்த்திவுடன் கைகோர்த்து அதிதி சங்கர்.
மற்றும் சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், மனோஜ், சிங்கம் புலி, சூரி, மைனா நந்தினி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்த இருந்தனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது இந்த படம் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தியதால்..
இந்த படத்தின் சக்சஸ் பார்ட்டி எல்லாம் பட குழு வைத்து அசத்தியது இந்த படம் இந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது இதுவரை இந்த படம் வெளியாகி 17 நாள் முடிவில் கார்த்தியின் பெருமான் திரைப்படம் சுமார் 70 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை எதிர்த்து தற்பொழுது தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
இருப்பினும் இருமன் படத்திற்கான மவுசு குறையாமல் இருப்பதால் இன்னும் சில கோடிகளை அள்ளி அசத்தும் என தெரிய வருகிறது. இதனால் விருமன் படக்குழுவும் சரி நடிகர் கார்த்தியும் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.