Leo Movie : லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் இன்று கோலாகலமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் படம் ரிலீஸ் ஆனால் மற்ற இடங்களில் அதிகாலை 4 மணிக்கு எல்லாம் படம் ரிலீஸ் ஆகி வெற்றி நடை கண்டு வருகிறது.
படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தை விட இரண்டு, மூன்று மடங்கு லியோ சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். படம் முழுவதும் சீட்டு நுனியில் உட்கார்ந்து இருப்பீர்கள். லியோ படத்தில் விஜயின் அபார நடிப்பு பலரையும் பேச வைத்துவிட்டது மற்றவர்களும் சும்மா சொல்லிவிடக்கூடாது.
சீட்டின் நுனியில் உட்கார வைத்து விட்டார் லோகேஷ்.! வெளியானது லியோ விமர்சனம்…
அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், த்ரிஷா, மிஸ்கின் என ஒவ்வொருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்துள்ளனர் எனக் கூறி வருகின்றனர். லியோ படம் நிச்சயம் 1000 கோடி வசூல் செய்யும் என படத்தை பார்த்த பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் லியோ படத்தின் Pre – sale வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. லியோ டிக்கெட் விற்பனையாகி 188 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக தெரிகிறது. முதல் நாள் முடிவதற்குள் நிச்சயம் 200 கோடி இலக்கை எட்டி விடும் என கூறப்படுகிறது. விஜய் கேரியரில் முதல் நாளில் உலகளவில் 200 கோடி வசூல் செய்த திரைப்படம் லியோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மட்டுமே 106 கோடி வசூல் செய்து இருக்கிறது. இந்தியா தவிர்த்து மற்ற வெளிநாடுகளில் மட்டும் 10 மில்லியன் அதாவது 82 கோடி வசூல் செய்திருக்கிறது மொத்தம் 188 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.