Maaveeran : தமிழ் சினிமாவில் இன்று பிரபலமான நடிகராக வருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் இவர் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.
படம் முழுக்க முழுக்க வில்லன்களை எதிர்த்து சண்டை போடும் ஒரு ஒரு சூப்பர் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் அவருடன் இணைந்து யோகி பாபு, அதிதி ஷங்கர், சரிதா, சுனில், மிஸ்கின் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து அசத்தினர்.
இதனால் படம் ஆரம்பத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பட்டி தொட்டி எங்கும் ஓடியது இதனால் மாவீரன் படத்தின் வசூலும் அள்ளியது. இதுவரை மட்டுமே மாவீரன் திரைப்படம் சுமார் 70 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது.
இந்த நிலையில் மாவீரன் படத்திற்கு இதுவரை கிடைத்துள்ள லாபம் எவ்வளவு என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. 35 கோடி செட்டில் உருவான இந்த திரைப்படம் இதுவரை மட்டுமே சுமார் 75 கோடிக்கு மேல் அள்ளியது. இதன் மூலம் ஷேர் மட்டுமே 49 நொடிகள் லாபம் கிடைத்திருக்கிறது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே 83 கோடி ஷேர் கிடைத்துள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்க்கையில் மாவீரன் தயாரிப்பாளருக்கு மொத்தமாக 85 கோடிக்கு மேல் லாபம் கிடைத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இன்னும் வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளும் பட்சத்தில் தயாரிப்பாளர் பெரிய லாபத்தை பார்பார் எனவும் கூறப்படுகிறது.