தென்னிந்திய சினிமா உலகில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை எடுப்பவர்கள் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் ஷங்கர் இவர் இதுவரை எடுத்த படங்கள் அனைத்துமே 100 கோடிக்கு மேல் பட்ஜெட் படங்கள் தான் முதலில் ஜென்டில்மேன் என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இவர் எடுத்த இந்தியன், சிவாஜி த பாஸ், முதல்வன் போன்ற படங்கள் அனைத்துமே பட்ஜெட்டையும் தாண்டி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இவர் கடைசியாக எடுத்த 2.0 படமும் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது கமலை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்து வருகிறார்.
மறுபக்கம் தெலுங்கில் டாப் நடிகர் ராம்சரண் வைத்து “கேம் டேஞ்சர்” என்னும் படத்தை எடுத்து உள்ளார் இந்த படம் ஒரு வித்தியாசமான படமாக உருவாகியுள்ளது படத்தில் எஸ் ஜே சூர்யா, அஞ்சலி, ஜெயராம், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு பொலிட்டிக்கல் கலந்த ஒரு வித்தியாசமான படமாக உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.
வெகு விரைவிலேயே இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலைல் கேம் சேஞ்சர் படத்தை இயக்கியதற்காக இயக்குனர் ஷங்கர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 25 கோடி 30 கோடி வாங்கிக் கொண்டிருந்த இயக்குனர் ஷங்கர் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்காக சுமார் 50 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம்..
தென்னிந்திய சினிமா உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ராஜமவுலி தான் முதலிடத்தில் இருந்தார் தற்பொழுது அவரது இடத்தை இயக்குனர் ஷங்கர் சமன் செய்திருக்கிறார். இயக்குனர் ஷங்கரின் சம்பள விஷயத்தை கேட்ட ரசிகர்கள் ஹீரோவுக்கு நிகராக சம்பளம் வாங்குபவர்கள் ஒன்னு ராஜமௌலி அடுத்து நீங்கள் தான் எனக்கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர்.