தமிழ் திரையுலகில் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்து சேது திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் தனக்கென ஒரு இடத்தையும் நிரந்தரமாக பிடித்துக் கொண்ட நடிகர் தான் விக்ரம். இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருகிறது.பொதுவாகவே நடிகர் விக்ரம் தன்னைத்தானே வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர் என்று கூட கூறலாம் இதனைத் தொடர்ந்து பார்த்தால் நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது விக்ரம் அவர்களுக்கு அடிபட்டுள்ளது என்றும் விரைவில் குணமடைந்து படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்வார் எனவும் தகவல் வெளியானது.இதனைத் தொடர்ந்து பார்த்தால் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று தான் சாமி.
இந்த திரைப்படத்தை இன்று வரை யாராலும் மறக்க முடியாது என்றே கூறலாம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் இந்த திரைப்படத்தின் வசூல் எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது 2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் உலக அளவில் ரூ.32.80 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் நடிகர் விக்ரம் வளர்ந்து வரும் பொழுது நடித்த இந்த திரைப்படத்திற்கு அன்றைய காலகட்டத்திலேயே நல்ல வரவேற்பு தந்தார்கள் எனவும் கூறி வருகிறார்கள்.