சகுந்தலம் படத்தில் நடித்ததற்காக “சமந்தா” வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா.? ஷாக்கான ரசிகர்கள்

samantha
samantha

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் சின்ன சின்ன விளம்பர படங்களில் நடித்து வந்த சமந்தா அதர்வாவின் பானா காத்தாடி திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே அழகையும், திறமையும் காட்டியதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன.

அதிலும் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்தார் அந்த வகையில் அஞ்சான், 10 எண்றதுக்குள்ள, தெறி, 24, தங்கமகன், பெங்களூரு நாட்கள் போன்ற படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தார். ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் அங்கு இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி ஹிட் அடித்தால் தற்போது தமிழ், தெலுங்கில் அதிகம் நடித்து வருகிறார்.

இந்த சமயத்தில் தான் நாக சைத்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக 4 ஆண்டுகள் கழித்து இந்த ஜோடி பிரிந்தது அதன் பிறகு தொடர்ந்து படங்களில் சமந்தா ஹீரோயின்னாகவும், ஐட்டம் பாடலுக்கு நடமாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் இதனால் சமந்தாவின் வளர்ச்சியை ஏறியது.

இப்படி ஓடிக்கொண்டிருந்த சமந்தா கடைசியாக நடித்த யசோதா திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை தொடர்ந்து சகுந்தலம், குஷி அகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் இதில் முதலாவதுதாக சகுந்தலம் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக வெளிவர இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் நடிக்க சமந்தா வாங்கிய சம்பளம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதன் படி பார்க்கையில் 7 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என ஒரு பக்கம் கூறப்படுகிறது மறுபக்கம் இந்த படத்தில் நடிக்க 150 நாட்கள் கால் சீட்டு ஒதுக்கியுள்ளார் இதற்காக அவர் 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.  இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டால் மட்டுமே உண்மை என்பது எது தெரியவரும்..