தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருவர் தனுஷ். இவர் தமிழை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் போன்றவற்றில் தொடர்ந்து நடித்து வெற்றி கண்டு வருகிறார். தனுஷ் தமிழில் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.’
இந்த படங்களை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ம1930 – 40 களில் நடந்த வரலாற்று சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்குவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் தனுஷ் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார் அவருடன் இணைந்து வளர்ந்து வரும் ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன், சந்திப் கிஷன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் தென்காசியில் போய்க்கொண்டிருக்கிறது.
படப்பிடிப்பு யாருக்கும் தெரியாமல் எடுக்கப்பட்டாலும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளிவருவது கேப்டன் மில்லர் பட குழுவுக்கு சற்று கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தீபாவளிக்கு படம் வர வேண்டும் என்பதால் விறுவிறுப்பாக வேலை பார்த்து வருகிறது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்க தனுஷ்..
எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் இந்த படத்தில் நடிக்க சுமார் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளாராம். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் நடிகர் தனுஷ் திரை உலகில் எத்தனை ஹிட் படங்கள் கொடுத்தாலும் ஒரே அளவு சம்பளம் தான் வாங்குகிறார் எனக் கூறி அவரை பாராட்டி வருகின்றனர். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.