வசூல் வேட்டையில் தனுஷின் “திருச்சிற்றம்பலம் படம்” – 8 நாள் முடிவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

dhanush
dhanush

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் சைலண்டாக இருந்து கொண்டு வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இப்பொழுது கூட மித்ரன் ஜவஹருடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து தனுஷ் நடித்துள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் படம்.

இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராசி கண்ணா என பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படம் முழுக்க முழுக்க தனது அம்மாவின் இறப்பிற்கு இவர்தான் காரணம் என தெரிந்து தனது தந்தை பிரகாஷ் ராஜ் மீது கடும் கோபம் இருக்கும் பழம் தனது தாத்தா பாரதிராஜா உடன் மிகவும் நெருக்கமாக இருப்பார்..

பள்ளி படிப்பில் நல்ல மாணவனாக இருந்தாலும் டெலிவரி செய்யும் வேலையை தனுஷ் பார்த்து வருவார் இந்த படம் சென்டிமென்ட் நட்பு என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்தது இந்த படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் 8 நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்தும் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் எட்டு நாள் முடிவில் உலகம் முழுவதும் மட்டுமே சுமார் 68 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை..

எதிர்த்து பல்வேறு திரைப்படங்கள் தற்பொழுது திரையரங்கில் வெளியாகியிருந்தாலும் இந்த படத்திற்கான மாவுசு இன்றும் குறையவில்லை இதனால் நிச்சயம் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் 100 கோடியை அள்ளிதான் நிற்கும் என பலரும் கூறி வருகின்றனர். இதனால் படகுழுவும் சரி தனுஷும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.