ஒரே வருடத்தில் இத்தனை சாதனையா..! தமிழ் திரை உலகையே பிரமிக்க வைத்த நடிகர் பாக்யராஜ்..!

bakiyaraj-1
bakiyaraj-1

How many achievements in one year: நடிகர் பாக்யராஜ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டும் இல்லாமல் பல்வேறு திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார் அந்தவகையில் இவர் இயக்கும் திரைப்படங்கள் தொடர் வெற்றியை அடைவது மட்டும் இல்லாமல் இவர் நடித்த காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் தொடர் நான்கு திரைப்படங்கள் மெகா ஹிட் கொடுத்த பாக்யராஜ் அவர்கள் அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தை தானே இயக்கி உள்ளார் அந்தவகையில் 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மௌன கீதங்கள் என்ற திரைப்படம் வெளியானது என்ற திரைப்படத்தில் பாக்யராஜ் மற்றும் சரிதா இன்னும் பலர் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படம் சுமார் 25 வாரங்களுக்கு மேலாக ஓடி மிகப்பெரிய சாதனையை படைத்தது இவ்வாறு இந்த திரைப்படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் போது இன்று போய் நாளை வா என்ற மற்றொரு திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் எதிர்வீட்டில் இருக்கும் ராதிகாவை மூன்று இளைஞர்கள் காதல் செய்யும் ஒரு நகைச்சுவையான திரைப்படமாகும்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் சுமார் 175 நாட்கள் திரையரங்கில் ஓடி மிகப்பெரிய சாதனையைப் படைத்தது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படமானது ரீமேக் செய்யப்பட்டு தற்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற பெயரில் சந்தானம் அவர்கள் நடித்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அதே ஆண்டில் விடியும் வரை காத்திரு என்ற திரைப்படம் பாக்யராஜ் நடிப்பில் வெளியானது இந்த திரைப்படத்தில் பாக்கியராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்தார்.

மேலும் அதே வருடத்தில் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாக்யராஜ் நடித்த திரைப்படம் தான் அடுத்த ஏழு நாட்கள் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அம்பிகா நடித்த அதுமட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜேஷ் அவர்கள் நடித்துள்ளார்.

இவ்வாறு ஒரே ஆண்டில் 4 திரைப்படத்தை இயக்கி கதை எழுதி மிகப்பெரிய கேட்டு கொடுத்த ஒரு நடிகர் என்றால் அது பாக்யராஜ் தான் இது மிகப்பெரிய சாதனை என்று அனைவரும் அறிந்ததே.