Chandramukhi 2 : 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான சந்திரமுகி திரைப்படம் வெளிவந்து 800 நாட்களுக்கு மேல் ஓடி 100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து சந்திரமுகி 2 படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பல வருடங்களுக்கு பிறகு தற்பொழுதுதான் இந்த படம் உருவாகி வருகிறது இந்த படத்தில் வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். அவருடன் இணைந்து லட்சுமி மேனன், ராதிகா, வடிவேலு என பல திரை பிரபலங்கள் நடித்து வருகின்றனர் இந்த படத்திற்கு கீராவணி இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் எப்படி அறிமுகமானார் என்பது குறித்து இயக்குனர் பி வாசு தனியார் பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார். சந்திரமுகி 2 படம் முக்கால் வாசி எடுத்து விட்டேன் நடிகை ராதிகா உட்பட பல நடிகர் நடிகைகள் சந்திரமுகி யார் என கேட்டனர்.
ஹிந்தி படத்திற்காக கங்கனா ரனாவத் அழைத்து கதை சொன்னேன் அப்பொழுது அவர் இப்போ என்ன படம் பண்ணுகிறீர்கள் என கேட்க சந்திரமுகி 2 என கூறினேன் சந்திரமுகியாக நடிக்க போவது யார் என கேட்க நான் இன்னும் தேர்வு செய்யவில்லை என கூறினேன்.
உடனே அவர் கிளம்பிவிட்டார் மறுநாள் அவர் என்னை தொடர்பு கொண்டு சந்திரமுகியாக நான் நடிக்கிறேன் என கூறினார். இப்படித்தான் அவர் படத்தில் ஒப்பந்தமானாராம். சந்திரமுகியாக அவருடைய நடிப்பை பார்த்து செட்டில் இருந்த பலரும் கைதட்டினார்களாம் இதனை பேட்டியில் கூறியுள்ளார்.