விஷாலின் “மார்க் ஆண்டனி” படம் எப்படி இருக்கு.. வெளிவந்த முதல் விமர்சனம்

Mark antony
Mark antony

Mark Antony movie : சினிமா உலகில் வாட்டசாட்டமாக இருக்கும் நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் குவியும் அந்த வகையில் நடிகர் விஷால் “செல்லமே” படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு  திமிரு, மலைக்கோட்டை, தாமிரபரணி, சண்டக்கோழி, சண்டக்கோழி 2 என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த விஷால் சமீபகாலமாக நடித்த படங்கள் பெருமளவு வெற்றியை பெறவில்லை.

இதனால் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த விஷால் இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கைகோர்த்து மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். இதில் நடிகர் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா,  ரிது வர்மா, செல்வராகவன், சுனில் என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டீசர் போன்றவை வெளிவந்து படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது அப்பொழுதே தெரிந்து விட்டது இந்த படம் டிராவல் கதையாக உருவாகியுள்ளது. படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி கோலாகலமாக வெளியாக உள்ளது இந்த நிலையில்  மார்க் ஆண்டனி படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்துள்ளது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் மனைவி தனது டுவிட்டர் பக்கத்தில் படத்தைப் பற்றிய ரிவ்யூ கொடுத்துள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. மார்க் ஆண்டனி படத்தில் எஸ். ஜே. சூர்யா சார் நடிப்பு வேற லெவல்.. நடிகர் விஷால் நடிப்பு சூப்பர்.. பல சர்ப்ரைஸ் படத்தில் இருக்கிறது படத்தில் ஒரு இடத்தில் கூட தோய்வு இல்லை என்ன மாதிரியான படத்தை எடுத்து இருக்கீங்க ஆதிக் ரவிச்சந்திரன்.

ஜி வி பிரகாஷ் பட்டையை கிளப்பிட்டார் பிளாக் பஸ்டர் லோடிங் என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாமல் மார்கண்டனை படத்திற்காக மரண வெயிட்டிங் என கூறி கமெண்ட் அடித்து வந்தனர் இந்த நிலையில் பேசி சூர்யாவும் இதற்கு பதிவிட்டுள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.