நடிகர் அஜித் தனது 61 வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் வெற்றி கரமாக நடித்து முடித்துள்ளார். இந்த படம் பணத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி உள்ளது மேலும் அஜித் இதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, மகாநதி, அஜய், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர் படம் வருகின்ற 11ஆம் தேதி கோலாகலமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது.
அதற்கு முன்பாக படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் பல்வேறு இடங்களில் ஜோராக நடந்து வருகிறது அதில் ஒன்றாக படத்தின் இயக்குனர் ஹெச் வினோத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர் போன்றவர்கள் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படம் எப்படிப்பட்டது என்பது குறித்து ஹச். வினோத் விளக்கமாக கூறியுள்ளார்.
துணிவு திரைப்படத்தின் முதல் பாதி யாரும் எதிர்பார்க்காத வகையில் பயங்கர ஜாலியாக பக்கா எண்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என்று தெரிவித்தார் அதனை தொடர்ந்து இரண்டாவது பாதி அனைத்து தரப்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமாறு இருக்கும் ஆகமொத்தம் இந்த படம் அஜித் ரசிகர்களை மட்டுமல்ல..
ஒட்டுமொத்த குடும்ப ஆடியன்செய்யும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக ஹச் வினோத் தெரிவித்துள்ளார். படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பாகவே இயக்குனரே தனது முதல் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். இந்த விஷயத்தை அறிந்த அஜித் ரசிகர்கள் அப்போ இந்த பொங்கல் தல பொங்கல் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.