The Road Movie : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை த்ரிஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அதற்கு முன்பாக இவர் நடித்துள்ள “தி ரோடு” திரைப்படம் இன்று கோலாகலமாக வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார். திரிஷாவுடன் கைகோர்த்து மியா ஜார்ஜ், டான்சிங் ரோஸ் சபீர், சந்தோஷ் பிரதாப், எம்எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தி ரோடு படத்தின் விமர்சனம் குறித்து நாம் விலாவாரியாக பார்ப்போம்.. படத்தின் கதை என்னவென்றால் திரிஷா, சந்தோஷ் பிரதாப் இருவருக்கும் ஒரு மகன் இருக்கின்றார். வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர். மகனின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி சாலை வழியாக பயணிக்கின்றனர்.
இன்னொரு பக்கத்தில் ஷபீர் ஒரு கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறார் அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி தன்னை காதலிக்கும்படி வற்புறுத்துகிறார் இதனால் சபீர் வேலை பறிபோக இந்த ஜோடியும், திரிஷா ஜோடியும் ஒரே சாலையில் பயணிக்கின்றனர் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை படம் முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ளது.
கொடுக்கபட்ட கதாபாத்திரத்தில் த்ரிஷா கனகச்சிதமாக நடித்துள்ளார், சபீரும் சும்மா சொல்லிவிடக்கூடாது சார் பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு இந்த படத்தில் மிரட்டி உள்ளார் மொத்தத்தில் இந்த படம் மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளது படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.