தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களில் காமெடியனாக நடித்து தனக்கென ஒரு இடத்தையும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் தனது திறமையால் நிறைவேற்றிக் கொண்ட நடிகர் தான் சந்தானம் இவர் செந்தில், கவுண்டமணி,விவேக்,வடிவேலு போன்ற நடிகர்களுக்கு பின்னால் வந்தாலும் தனது திறமையால் தற்பொழுது கதாநாயகனாக வலம் வருகிறார்.
இவர் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,A1,டகால்டி,பிஸ்கோத் போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து சந்தானம் தற்போது நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் டிக்கிலோனா என்ற திரைப்படம் உருவாகி உள்ளது அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் சந்தானம் 3 கதாபாத்திரமாக நடித்து உள்ளார் என்பது மட்டும் தெரிகிறது சமீபத்தில் வந்த டிக்கிலோனா ட்ரைலரில் சந்தானத்தின் நடிப்பு மிகவும் அருமையாக இருப்பது மட்டுமல்லாமல் இந்த ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களைப் பார்க்க வைத்து கடந்து வருகிறது.
சந்தானம் சினிமா வாழ்க்கையில் படு பிசியாக இருந்தாலும் தனது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார் ஆம் சந்தானம் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடியுள்ளார் அப்போது ஒரு ரசிகர் திடீரென உங்களது புதிய புகைப்படம் இருந்தால் கொடுங்கள் எனக் கேட்டதற்கு சந்தானம் தனது சிறுவயது புகைப்படத்தை அந்த ரசிகருக்கு அனுப்பியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சந்தானமா இது மிகவும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து சந்தானம் எப்படி இருந்துள்ளார் பாருங்க என கூறி வருகிறார்கள்.