17 வயது பருவப் பெண்ணாக இருந்த பொழுது நடிகை நமீதா எப்படி இருந்துள்ளார் பாத்தீங்களா.!

namitha
namitha

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின்பு பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கி அதன் பிறகு தமிழில் நடிக்க வந்த நடிகை நமீதா நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து அஜித்,விஜய், சத்யராஜ்,பிரபு,அருண்,சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார்.

இவ்வாறு பிரபலமடைந்து வந்த நமீதா ஒரு சில வருடங்கள் சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டார் பின்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தலைகாட்டினார் அதன்பின் திருமணம் செய்து கொண்டு தனது இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட இவர் தொடர்ச்சியாக சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறேன் என்பதை அறிவிக்கும் வகையில் நாள் தோறும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அந்தவகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் குறிப்பாக இவர் ஒரு கட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் நடிகை நமீதா தனது 17 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நமீதா 17 வயதில் பார்ப்பதற்கு அடையாளமே தெரியாமல் இருக்கிறார் இது நமீதா தானா என இந்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

namitha
namitha

ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு நமீதா 17 வயதில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார்.அப்பொழுது மட்டும் இவர் திரைப்படத்தில் நடிக்க வந்து இருந்தால் இவர் தான் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகையாக திகழ்ந்து இருப்பார் என கூறி இவரை ஐஸ் வைத்து வருகிறார்கள்.