உலகநாயகன் கமலஹாசன் சிகரெட் பழக்கத்தை எப்படிவிட்டார் தெரியுமா.? சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயம்.

kamal
kamal

உலகநாயகன் கமலஹாசன் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்காக தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவது இவரது ஸ்டைல் அந்த காரணமோ என்னவோ இவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றியை பார்க்கிறது.

சினிமாவுலகில் சமீபகாலமாக பெருமளவு தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்றாலும் அவ்வபோது கிடைக்கின்ற நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்தார் அது பாதியிலேயே கிடைக்க தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரசியல், கதர் ஆடை தயாரித்தல், சின்னத்திரையில் தொகுப்பாளர் என அனைத்திலும் பங்கு பெற்று பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில் கமல் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அண்மையில் பேட்டியில் நடிகர் கமல் தன்னிடம் இருந்த ஒரு கெட்ட பழக்கத்தை பற்றி பேசியுள்ளார்.

சினிமாவுலகில் சிறப்பாக நடித்த கமல் அதேசமயம் ஒருசில கெட்ட பழக்கம் அதாவது சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தாராம். அதை எப்படி நிறுத்தினேன் என்பது பற்றியும் பேசி உள்ளார் ஒரு நாள் படப்பிடிப்பில் சிகரெட் பிடிக்கும்போது அருகிலிருந்த லைட்மேன்  கையிலிருந்த சிகரெட்டை பிடிங்கி போட்டு இப்போதுதான் உன்னை குழந்தையாக பார்த்தது போல் உள்ளது.

இந்த வயதில் உனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் என திட்டினார் அதன்பிறகு எங்குமே பிடிக்க முடியாமல் போனது. சினிமாவில் எல்லோர் முன்பும் வளர்ந்ததால் எங்கேயும் பிடிக்க முடியாது கழிப்பறையில் பிடிக்கலாம் என்று நினைத்தால் அங்கே போய் படிப்பது என்று தோணியது பின் சிகரெட் பிடிப்பதையும் முற்றிலுமாக நிறுத்தி விடுவேன் என கூறினார்.