விஜயின் தலைவாசல் திரைப்படத்தில் நடித்த நடிகை தற்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.? இதோ குடும்ப புகைப்படம்.

sivaranjani

சினிமாவில் பல பிரபலங்கள் ஆரம்பத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பின்நாட்களில் சினிமாவில் இருந்து காணாமல் போவதும் உண்டு. அத்தகைய பிரபலங்கள் ரசிகர்களை ஏதோ ஒரு காரணத்தால் கவர்ந்து இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவரை தான் தற்பொழுது நாம் பார்க்க உள்ளோம்.

அப்படி மினுமினு கண்கள் மூலம் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்திருந்தவர் சிவரஞ்சினி. 90 காலகட்டங்களில் அறிமுகமாகிய சிவரஞ்சினி ஆரம்பத்திலிருந்தே சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் அந்த வகையில் இவர் மிஸ்டர் கார்த்திக் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து அவர் தமிழில் தலைவாசல், டேவிட் அங்கிள், ராஜதுரை ,செந்தமிழ்ச்செல்வன், சின்ன மாப்பிள்ளை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் இவர் தமிழில் மட்டும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தாமல் மலையாளம் ,கன்னடம் ,தெலுங்கு போன்ற பிறமொழிகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்தார்.

இந்த நிலையில் அவர் பிரபல நடிகரான மேகா ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து படிப்படியாக விலகினார். இவர் கடைசியாக தமிழில் துர்க்கை அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்தது அவருக்கு கடைசி படமாக இருந்தது இப்படத்தை தொடர்ந்து அவர் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

தற்போது அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர் இவர் சமீபத்தில் அவரது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் மகன் உள்ளனரா என்று கூறி புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர் ரசிகர்கள். இதோ அந்த புகைப்படம்.

sivaranjani
sivaranjani