விஜய் சேதுபதி வேண்டாம்.. வில்லனை கதாநாயகனாக மாற்றிய பாலா அதுவும் எப்படி தெரியுமா.?

bala2

தனது திரைப்பயணத்தில் தனது ரசிகர்களுக்கு சரியான ஹிட்டடிக்கும் திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக அபூர்வமாக கதையை எழுதி படங்களை இயக்கி வரும் இயக்குனர் தான் பாலா இவர் ஆரம்ப காலத்தில் எடுத்த சேது,பிதாமகன்,நான் கடவுள் என பல பயங்கரமான வெற்றித் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விலங்கிவிட்டார்.

அதிலும் குறிப்பாக பாலா இயக்கிய திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் அதில் யார் கதாநாயகன் என்று கூட பார்க்காமல் ஒரு கட்டத்தில் அவர் இயக்கிய திரைப்படங்களைப் பார்ப்பதற்கு அவ்வளவு ஆர்வமாக வருவார்கள் என்பது நமக்கு தெரிந்ததுதான் அதேபோல் பாலா இயக்கிய திரைப்படங்களில் முக்கியமான திரைப்படங்களாக அமைந்தது அவன் இவன்,பரதேசி இந்த இரண்டு திரைப்படங்களும் கிராமத்தில் இப்படித்தான் நடக்கும் என்பதை அப்படியே காட்டியிருப்பார்.

நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்து வந்த பாலா சமீபகாலமாக நல்ல ஹிட்டடிக்கும் திரைப்படங்களை தனது ரசிகர்களுக்கு கொடுக்க முடியவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறார் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த தாரை தப்பட்டை திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெறவில்லை இதனால் இந்த திரைப்படம் தோல்வியை தழுவியது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வரிசையாக வெளியான நாச்சியார்,வருமா போன்ற திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறாமல் போய்விட்டது.

மேலும் பாலா இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நல்ல நல்ல திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது நமக்கு தெரியும் ஆம் இவர் மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட்டான ஜோசப் என்ற திரைப்படத்தை தமிழில் விசித்திரன் என்ற தலைப்பில் அபூர்வமாக பாலா தயாரித்து வருகிறார்.

bala
bala

இந்த திரைப்படத்தை பற்றி தான் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது இந்த திரைப்படத்தில் முதலில் விஜய்சேதுபதி தான் கதாநாயகனாக நடிக்க பல சினிமா பிரபலங்கள் கூறினார்களாம் ஆனால் பாலா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்கே சுரேஷை கதாநாயகனாக மாற்றியுள்ளார் அந்த வகையில் பார்த்தால் இந்த திரைப்படத்தின் டீசர் கூட நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.