சீரியல் நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவரது இழப்பு சின்னத்திரைக்கு மட்டுமல்லாமல் அவருடன் பழகி வந்த உறவினர் மற்றும் நண்பர்களால் தற்போது வரை தாங்க முடியவில்லை.
அவரைப்பற்றி நாள்தோறும் ஒரு திடுக்கிடும் தகவல் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகிறது.
இந்நிலையில் சித்ரா இறப்பதற்கு முன்பு கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சிதான் ஸ்டார்ட் மியூசிக் மேலும் ஒரு சில வாரத்திற்கு முன்பு கூட இந்த ஸ்டார்ட் மியூசிக் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதை நாம் பார்த்தோம் இந்நிலையில் கடந்த வாரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் TRP விவரம் வெளிவந்துள்ளது.
அதில் முதன்முறையாக டாப்-5 லிஸ்டில் சித்ரா பங்குபெற்ற ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியும் வந்துள்ளது. இந்த விவரத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த விவரத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருவது மட்டுமல்லாமல் நீங்க மட்டும் இல்லாமல் போயிட்டீங்களே என கூறி வருகிறார்கள்.