தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் வெற்றி மாறன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது தொடர்ந்து அடுத்தடுத்து நடிகர் தனுசை வைத்து பல திரைப்படங்களை இயக்கி வந்தார் வெற்றி மாறன்.
அதிலும் குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் தேசிய விருதையும் பெற்று தந்தது. அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படமும் தேசிய விருது பெற்று தந்தது. இப்படி இரண்டு தேசிய விருதைப் பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் தற்போது தேசிய விருது இயக்குனர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து இத்தனை நாட்களாக காமெடி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் சூரியை வைத்து தற்போது வெற்றிமாறன் அவர்கள் விடுதலை படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் திரையில் வெளியாக காத்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விடுதலை திரைப்படத்தின் கதை எப்படி உருவானது என்பது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதாவது விடுதலை திரைப்படம் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை பற்றி எடுத்துக் கூறும் விதமாக தான் உருவாக்கப்பட்டது அது மட்டுமல்லாமல் இன்று நடக்கக்கூடிய விஷயங்கள் அனைத்தும் என்று நடக்கும் நாளை நடக்கக்கூடிய விஷயங்களை எதிர்பார்த்து இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதைதான் இது இப்படித்தான் இந்த படத்தின் கதை ஆரம்பிக்கும் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறி இருக்கிறார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் இரட்டிப்பாக்கி இருக்கிறது.