விக்னேஷ் சிவன் எதிர்பார்க்கும் நடிகர்களை தட்டி தூக்கம் அஜித்.! AK 62 படத்தில் சந்தானம் கமிட்டானது எப்படி.

ak-62
ak-62

H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது படம் முழுக்க முழுக்க பேங்க் சம்பந்தப்பட்ட சமூக விழிப்புணர்வு மற்றும் ஆக்சன் காமெடி என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் அஜித் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களை தற்பொழுது வெகுவாக கவர்ந்து இழுத்து உள்ளது.

அதனால் இன்று வரையிலும் திரையரங்கில் துணிவு திரைப்படம் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது மேலும் வசூலிலும் அடித்து நொறுக்கி வருகிறது இதுவரை தமிழகத்தில் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 கோடி வசூலை நெருங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் துணிவு படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது.

அஜித்தும் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க விக்னேஷ் சிவனுடன் இணைந்து தனது 62ஆவது திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் ஷூட்டிங் வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை ஆனால் ஒரு சில பெயர்கள் தொடர்ந்து அடிபடுகின்றன.

அதன்படி அரவிந்த்சாமி, சந்தானம், திரிஷா அல்லது பாலிவுட் ஹீரோயின் யாராவது ஒருவர் நடிக்கலாம் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஹீரோவாக நடித்து வந்த சந்தானம் எப்படி அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தில் காமெடியனாக நடிக்க ஒத்துக்கொண்டார் என்பது குறித்து பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில் அதற்கு பதில் கொடுத்துள்ளார் செய்யாறு பாலு. அவர் சொன்னது என்னவென்றால்..

santhanam
santhanam

அஜித் விக்னேஷ் சிவனை அழைத்து நீங்கள் போய் நடிகர் சந்தானத்தை பாருங்கள் எனக் கூறி உள்ளார். விக்னேஷ் சிவனும் சந்தானத்தை பார்த்து உள்ளார் அப்பொழுது அஜித் சந்தானத்திடம் போனில் நான் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கிறேன் நீங்களும் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என கேட்க அவரும் ஓகே சொன்னாராம்.. இப்படிதான் ஏகே 62 திரைப்படத்தில் சந்தானம் இணைந்தார் என பேட்டியில் சொல்லியுள்ளார்.