சாண்டியின் மனைவிக்கு இரண்டாவது குழந்தை எப்படி பிறந்தது..? நெட்டிசன்கள் கேள்விக்கு நெத்தியடி கொடுத்த சாண்டியின் மனைவி..!

sandy-2

தன்னுடைய சிறந்த நடனத்தின் மூலமாக பல்வேறு ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் சாண்டி.  இவ்வாறு பிரபலமான நமது நடன கலைஞர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் இவர் நடனமாடும்போது செய்யும் காமெடிகளை யாராலும் மறக்க முடியாது. அந்த வகையில் தற்போது  தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

சாண்டிக்கு தற்சமயம் திருமணமாகி ஒரு குழந்தையும் பெற்றுவிட்டார் இந்நிலையில் தன்னுடைய இரண்டாவது குழந்தையையும் பெற்றெடுத்த சாண்டி ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சாண்டி ஏற்கனவே காஜல் பசுபதி என்பவரை திருமணம் செய்து விவாகரத்து செய்து கொண்டார்.

பின்னர் இந்த விவகாரத்திற்கு பிறகுகாக சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இவருக்கு பிறந்த குழந்தை சுகப்பிரசவமா அல்லது ஆப்ரேஷனா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  இவ்வாறு எழுந்த கேள்விக்கு சாண்டியின் மனைவி குழந்தை பிறப்பை பற்றி ஏன் இப்படி எல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள் என்று அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளத்தில் இப்படி  மனக்கவலை உருவாக்கும்படி அடிக்கடி பல பதிவுகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் முன்பெல்லாம் நடிகர்கள் நடிகைகளை பற்றி விமர்சித்தார்கள் பரவாயில்லை ஆனால் தற்போது அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் தரக்குறைவாக பேச ஆரம்பித்து விட்டீர்களே என  மனம் நொந்து பேசியுள்ளார்.

sandy-1
sandy-1