கேரளாவை பூர்வீகமாக கொண்ட பிரியாமணி ஆரம்பத்தில் நடித்தது என்னவோ தமிழ் தான். அதனால் 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் அதன் பின் அது ஒரு கனாக் காலம், மது, மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என அடுத்தடுத்த சூப்பர் படங்களை கொடுத்தாலும் 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் தான் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது.
அதன் மூலம் இவர் இந்திய அளவில் கவனிக்கப்பட கூடிய ஒரு நடிகையாக மாறினார் மேலும் மற்ற மொழிகளிலும் வாய்ப்பு கிடைக்க அது காரணமாக இருந்தது ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு கட்டத்தில் ஓடிக்கொண்டு இருந்தார் அந்த காரணத்தினாலேயே தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
பிற மொழிக்கு பக்கங்களில் கவர்ச்சியை காட்டி நடித்து வந்த இவர் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் நடிக்கவுள்ளார் அந்த வகையில் இவர் பிரசாந்த் நடிக்கும் “அந்தகன்” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது மேலும் தற்போது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து பிரியாமணி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இடையில் கொழுக் மொழுகென்று இருந்து கொண்டிருந்த இவர் திடீரென மாறியிருப்பதை பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது அதற்கான உண்மையை சொல்லியுள்ளார் கடந்த நான்கு வருடங்களாக நான் சைவ சாப்பாடு சாப்பிட்டு வருகிறேன்.
இதனால் உடல் எடையை பிட்டாக வைத்து உள்ளது மட்டுமல்லாமல் அழகாக இருக்கிறேன் என கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ரசிகர்களும் இப்படி இருக்கிறது தான் எங்களுக்கும் பிடித்திருக்கிறது என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.