எவ்வளவு தைரியம் இருந்தா தல படத்தில் இவர்களை நடிக்க வைத்து இருப்பீர்கள்..! கோபமடைந்த நடிகர் சிம்பு..!

simbu
simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு இவ்வாறு பிரபலமான நடிகர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பது மட்டும் இல்லாமல் இவர் திரைத்துறையில் திரைப்படங்கள் இயக்குவது தயாரிப்பது மற்றும் பாடல்கள் பாடுவது நடனம் ஆடுவது என பல்வேறு திறன் கொண்டவர்.

இந்நிலையில் நமது நடிகர் சமீபத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வெகு நாட்கள் கழித்து சிம்புக்கு கிடைத்த ஒரு மெகா ஹிட் திரைப்படமாக அமைந்தது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சிம்பு அவர்கள் வெங்கட்பிரபுவின் நெருங்கிய நண்பர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் சிம்பு ஒஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு மங்காத்தா படத்தின் முதல்நாள் காட்சியை நான் பார்க்க வேண்டும் என்பதற்காக கிளம்பி விட்டாராம்.

அந்த வகையில் இந்த மங்காத்தா திரைப்படத்தை பார்த்துவிட்டு சிம்பு உடனே வெங்கட் பிரபுவை மிக கடுமையாக திட்டியுள்ளார் ஏனென்றால் இந்த மங்காத்தா திரைப்படம் அஜித்தின் 50வது திரைப்படம் ஆகும் அந்த வகையில் ஒரு பாடலில் மகத்தையும் பிரேம்ஜியும் போட்டு நாசம் செய்து விட்டீர்கள் அவருக்கென ஒரு தனி பாடலை வைத்திருக்க வேண்டுமென சிம்பு வெங்கட் பிரபுவை கடுமையாகப் பேசியுள்ளார் என இதனை அவரே பேட்டியில் கூறியுள்ளார்.