தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக இருந்தும் ரஜினிக்கு இது மட்டும் எப்படி தெரியாம போச்சு.? சூப்பர் ஸ்டார் மகள் சௌந்தர்யா வெளியிட்ட செய்தியால்- கேள்வி கேட்கும் ரசிகர்கள்.

rajini-and-soundarya
rajini-and-soundarya

தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக மேலாக நடித்து வரும் ரஜினி.  தொடர்ந்து கூட படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் சிறுத்தை சிவாவுடன் முதல் முறையாக கைகோர்த்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது இந்த படத்திற்கு முன்பாகவே ஒரு நல்ல செய்தியும் வெளிவந்துள்ளது.

அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் உள்ள உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்று கொண்டார் மேலும் அந்த விருதை பெற்ற உடன் நான் இந்த விருதை பெற முக்கிய காரணம் என்னை வாழவைத்த தமிழ்நாட்டு மக்கள் என குறிப்பிட்டார் மேலும் தனது மருமகன் தனுஷ் உடன் அந்த விருதை தூக்கிப்பிடித்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையதள பக்கத்தில் தீயாய் பரவியது.

இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக தனது மகள் சவுந்தர்யா புதிதாக உருவாகியுள்ள HOOTE APP துவங்கி வைத்தார். ஒரே நாளில் இரண்டு சிறப்பான சம்பவத்தை செய்துள்ளார் ரஜினி ஆனால் இதை நேற்று அறிவித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

HOOTE APP  துவங்கிய வைத்தபின் ரஜினியின் மகள் சவுந்தர்யா எனது அப்பாவிற்கு தமிழ் பேச தெரியும் ஆனால் என் அப்பாவிற்கு தமிழ் எழுத தெரியாது என கூறியுள்ளார்.  இதை அறிந்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் விட்டனர் ஏனென்றால் சினிமா உலகில் 40 ஆண்டுகளாக இங்கே இருந்து ஓடிக்கொண்டிருக்கும் அவருக்கு தமிழ் நல்ல பேச வரும்.

ஆனால் எழுத தெரியாதா.. என்பதே இப்போதுதான் பலருக்கும் தெரிந்து உள்ளதால் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர் ஒருவழியாக உண்மையை உடைத்து விட்டீர்கள் அதுவும் நல்லது தான் என பலரும் கூறுகின்றனர்.