சந்திரமுகி 2வில் இது இல்லாமல் எப்படி.? உண்மையை உடைத்த ராகவா லாராஸ்….

chandramukhi-2
chandramukhi-2

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஒடி அபார சாதனை படைத்து வெற்றி பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர், நயன்தார, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்து உள்ளனர்.

இந்த திரைப்படம் காமெடி கலந்த ஒரு த்ரில்லர் திரைப்படமாக வெளியாகி பிரமாண்ட வெற்றியை பெற்றது இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் பி வாசு அவர்கள் தான் இயக்குகிறார் ஆனால் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ரஜினிக்கு  பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார்.

மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு அவர்கள் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல் பாகத்தில் ஒரு 30 அடி நீளமுள்ள பாம்பு ஒன்றை காட்டப்பட்டிருப்பார்கள் அதுமட்டுமல்லாமல் இறுதியில் அந்த பாம்பு அந்த அரண்மனையை விட்டு வெளியேறும் காட்சியும் இடம்பெற்று இருக்கும்.

அந்த பாம்பு சந்திரமுகி 2வில் இடம் பெற்று இருக்கா இல்லையா என்று இயக்குனர் வாசு அவர்களிடம் கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலளித்த வாசு அந்தப் பாம்பின் காட்சி இடம்பெற்று இருக்கு ஆனால் அந்த பாம்பு குறித்து முழு விவரம் மூன்றாம் பாகத்தில் தான் தெரியும் என்று வாசு அவர்கள் கூறியதாக ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் நெட்டிசன்கள் மூணாவது பார்ட் வேற இருக்கா என அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள். மேலும் இன்னும் சந்திரமுகி 2 திரைப்படத்திலிருந்து வேற எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.