எப்பா சாமி போதும்டா முடியல..! ஆயிரம் எபிசோட் சீரியலை நிறுத்த சொல்லி கதறும் ரசிகர்கள்

serial 1
serial 1

தற்பொழுது உள்ள பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு நல்ல தரமான கதையை உள்ள சீரியல்களையும்,நிகழ்ச்சிகளையும் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்த தொலைக்காட்சி ஜீ தமிழ். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல சீரியல்களை  ரசிகர்களை கவரும் வகையில் இயக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் தான் யாரடி நீ மோகினி. ஹீரோவாக சஞ்சீவ் மற்றும் இவருக்கு ஜோடியாக புதிதாக நட்சத்திரா என்று நடிகை அறிமுகமாகியுள்ளார். நட்சத்திரா இந்த சீரியலில் வெண்ணிலா என்ற  கேரக்டரில் நடித்து வருகிறார்.

இவர்களை தொடர்ந்து வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த பாத்திமா பாபு மற்றும் சைத்ரா ரெட்டி போன்றவர்கள் வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார்கள். இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்ட சில காலங்கள் சஞ்சீவ் நடித்த வந்தார். பிறகு தற்போது சில மாதங்களாக ஸ்ரீ கணேஷ் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் வில்லியாக சைத்ரா ரெட்டி இவர் ஸ்வேதா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் . இந்நிலையில்   தொடர்ந்து ஹீரோவை அடைவதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார் ஸ்வேதா.இவ்வாறு இந்த ஒரு கதையை மட்டும் மையமாக வைத்து இந்த சீரியல் தொடர்ந்து பல வருடங்களாக 1000 எபிசோடுக்கு மேல் ஒளிபரப்பாகிய வந்ததால் ரசிகர்கள் இந்த சீரியலை வெறுத்து வருகிறார்கள்.

எனவே ரசிகர்கள் இதுக்கு மேல இந்த சீரியலை பார்க்க முடியாது சீக்கிரத்தில் முடித்து விடுங்கள் என்று கூறிவருகிறார்கள்.