தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் இவர் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடித்துள்ள திரைப்படம் துணிவு. இந்த படத்தை இளம் இயக்குனர் ஹச். வினோத் இயக்கி உள்ளார் போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்திருக்கிறார்.
படம் முழுக்க முழுக்க அயோக்கியர்களின் ஆட்டம் நிறைந்த ஒரு படமாக இருக்கும் என ஏற்கனவே இயக்குனர் சொல்லி உள்ளார். அதனை தொடர்ந்து வெளிவந்த அப்டேட்டுகளும் அதை உறுதிப்படுத்தியது. இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், ஜான் கொக்கன், மலையாள நடிகை மஞ்சு வாரியர்..
மற்றும் பிக்பாஸ் பிரபலங்களான சிபி அமீர் பாவனி போன்றவர்களும் இதில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இருந்து கடைசியாக வெளிவந்த கேங்ஸ்டர் பாடல் வேற லெவலில் லைக்குகளை அள்ளி அசத்தியது அதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் ட்ரைலரை பெரிய அளவில் எதிர்பார்த்து வந்தனர்.
அந்த வகையில் இன்று கோலாகலமாக இரவு 7:00 மணிக்கு துணிவு படத்தின் டிரைலர் வெளியானது. இந்த ட்ரைலரில் அஜித் பேங்க் உள்ளே சென்று அங்கே இருப்பவர்களை மிரட்டி பணத்தை கொள்ளை அடிக்கிறார் அந்த சீன் செம்மையாக இருக்கிறது மேலும் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி போன்றவர்கள் இந்த ட்ரைலரில் செம்ம மாஸாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரைலர் வேற லெவலில் லைக்குகளை அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் துணிவு படத்தின் ட்ரைலர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளி வருகின்றன அது குறித்து விலா வாரியாக பார்ப்போம்..
Beast fan Pola AK 😍😂#ThunivuTrailer #VarisuPongal pic.twitter.com/I2wmlB4bsM
— H A R I ᥫ᭡ (@ItzHarispeaks) December 31, 2022
How is #Thunivu Trailer 👀🔥🔥!? pic.twitter.com/yzsklhCjch
— Saloon Kada Shanmugam (@saloon_kada) December 31, 2022