சினிமாவுலகில் வாரிசு நடிகர்களின் மகன், மகள்கள் நடிக்கின்றது காலம் காலமாக நடந்து வருகிறது அந்த வகையில் மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக 90 காலகட்டங்களில் தொடங்கியபோது இப்போ வரையிலும் வலம் வருபவர் நடிகர் ஜெயராம் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.
என்றால் அவரை தொடர்ந்து அவரது மகனும் தற்போதைய சினிமா உலகில் கால் தடம் பதித்து தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் நடித்து வருகிறார் தமிழில் இவர் மீன் குழம்பும் மண் பானையும், ஒரு பக்க கதை என பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடதக்கது.
தமிழில் தாண்டி வெப்சீரிஸ் பக்கங்களிலும் இவர் நடித்து வருகிறார். தமிழில் கூட இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “விக்ரம்” திரைப் படத்திலும் இவர் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இதனால் அவரது மார்க்கெட் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் காளிதாஸ் கேரளாவில் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படக்குழு அண்மையில் மூன்னாறில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி உள்ளது. அந்த படக்குழு பணத்தை கட்டாமல் வந்து போயுள்ளது ஒரு கட்டத்தில் ஹோட்டல் ஊழியர்கள் படக்குழுவை சூழ்ந்துகொண்டுனர்.
பணத்தை எடுத்து வைத்த பின் வெளியே போகலாம் என காளிதாஸ் உட்பட பல நடிகர்கள் மற்றும் பிரபலங்களை அடைத்து வைத்து உள்ளனர். ஒரு வழியாக படக்குழு பணத்தை கட்டிவிட்டு பின் இறுதியாக வெளியேறியது. இச்செய்தி இணையதளத்தில் வேகம் எடுத்து உள்ளது.