நடிகர் அஜித்குமார் அண்மைக்காலமாக ஆக்ஷன் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படம் கூட முழுக்க முழுக்க ஒரு திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 61வது திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார் இந்த படமும் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரியை மையமாக உருவாகுவதால் இந்தப் படத்தில் ஆக்ஷனுக்கு காட்சிகள் பஞ்சமில்லாமல் இருக்கும் என தெரியவருகிறது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சுவாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி என ஒரு மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே.. இந்த படத்தில் நடித்து வருகிறது இதுவரை AK 61 படப்பிடிப்பு 55 நாட்கள் இரவு பகல் பார்க்காமல் நடைபெற்று வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக நடிகர் அஜித் இரவு பகல் பார்க்காமல் இந்த படத்தில் சிறப்பாக நடித்து வருகிறார் காரணம் இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஐதராபாத்தில் தங்கி நடிகர் அஜித்குமார் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து போவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த ஹோட்டல் நிறுவனம் ஒரு புதிய கேக் ஒன்றை ரெடி செய்து நடிகர் அஜீத் குமாரை கேக் வெட்ட வைத்து அழகு பார்த்து உள்ளது. கேக் வெட்டி பக்கத்திலிருந்த ஹோட்டல் ஊழியர்களுக்கு ஊட்டி விட்டார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. AK ரசிகர்களும் பார்த்து தற்பொழுது கொண்டாடி வருகின்றனர்.