பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தொகுப்பாளினி ரம்யா இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் சினிமா நிகழ்ச்சிகள் என பலவற்றையும் தொகுத்து வழங்கி உள்ளார்.
அந்த வகையில் இவர் தொகுப்பாளராக வலம் வந்தது மட்டுமில்லாமல் பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் நடித்த திரைப்படங்கள் ஓ கதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை ஆகிய திரைப்படங்கள் ஆகும்.
இதனைத் தொடர்ந்து நமது தொகுப்பாளினி சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பொதுவாக நமது நடிகை என்னதான் திரைப்படம் மற்றும் தொகுப்பாளர் பணி என பிஸியாக இருந்தாலும் உடல் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
அந்த வகையில் தினசரி கடுமையான உடற்பயிற்சி செய்து தற்போது ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளர் என்ற சான்றிதழைப் பெற்றுள்ளார் இவ்வாறு ஒரு பெண் தொகுப்பாளினி எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பேசப்பட்டது மட்டும் இல்லாமல் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ரம்யா இந்த சான்றிதழ் வாங்கியது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது இதற்காக கடவுள் அம்மா அப்பா நண்பர்கள் என்னுடைய இன்ஸ்டா ஃபேமிலி என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்று புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.